search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு"

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வந்தது. இன்று நீர்வரத்து மீண்டும் சரிந்து 72 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. #MetturDam
    மேட்டூர்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வந்தது.

    இந்த நிலையில் கடந்த 16-ந்தேதி 86 கன அடியாக இருந்த நீர்வரத்து 17-ந் தேதி 118 கன அடியாக அதிகரித்தது. நேற்று நீர்வரத்து மேலும் அதிகரித்து 134 கன அடியானது. இன்று நீர்வரத்து மீண்டும் சரிந்து 72 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக காவிரி ஆற்றில் 2500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து பல மடங்கு கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

    நேற்று 72.70 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 72.43 அடியானது. இதே நிலை நீடித்தால் இனி வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக சரிய வாய்ப்புள்ளது. #MetturDam
    கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 15 ஆயிரம் கன அடியாக சரிந்துள்ளது. #MetturDam
    மேட்டூர்:

    கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்துள்ளது.

    இதனால் அந்த அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீரின் அளவும் படிப்படியாக குறைக்கப்பட்டது.

    கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து இன்று காலை 2 ஆயிரத்து 886 கன அடி தண்ணீர் மட்டுமே காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்துள்ளது.

    மேட்டூர் அணைக்கு நேற்று 21 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 15 ஆயிரம் கன அடியாக சரிந்தது. நேற்று 20 ஆயிரத்து 800 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று தண்ணீர் திறப்பு 14 ஆயிரத்து 800 கன அடியாக குறைக்கப்பட்டது.

    நேற்று 16 கண் பாலம் வழியாக திறக்கப்பட்ட தண்ணீர் திறப்பு இன்று முற்றிலும் நிறுத்தப்பட்டு நீர் மின் நிலையங்கள் வழியாக திறந்து விடப்பட்டுள்ளது.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று 21 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்த நிலையில் இன்று தண்ணீர் வரத்து 13 ஆயிரம் கன அடியாக குறைந்தது. ஒகேனக்கல் அருவிகளில் காலை 6 மணி முதல் 9 மணி வரையும், மாலை 5 மணி முதல் 7 மணி வரையும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

    வழக்கமான பாதையில் பரிசல்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக படகு சவாரி சென்று மகிழ்ந்தனர். கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டதால் இனி வரும் நாட்களில் நீர்வரத்து மேலும் சரிய வாய்ப்புள்ளது. #MetturDam

    ×